9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்!!

படிக்க வேண்டிய வயதில் வறுமையின் பொருட்டு வேலைக்கு சென்ற குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட திட்டமே மதிய உணவுத் திட்டமாகும். பட்டினியில் வாடும் பிள்ளைகள் பள்ளி சென்றான் ஒரு நேர உணவு கிடைக்குமே என்று பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். இந்தத் திட்டமானது கர்ம வீரர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் அறிமுகமானது. இந்தத் திட்டமானது 1955 ஆம் ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு
 
9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்!!

படிக்க வேண்டிய வயதில் வறுமையின் பொருட்டு வேலைக்கு சென்ற குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட திட்டமே மதிய உணவுத் திட்டமாகும்.

பட்டினியில் வாடும் பிள்ளைகள் பள்ளி சென்றான் ஒரு நேர உணவு கிடைக்குமே என்று பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர்.

இந்தத் திட்டமானது கர்ம வீரர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் அறிமுகமானது.

இந்தத் திட்டமானது 1955 ஆம் ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டமாக அறிமுகமானது, பின்னர் சில வருடங்களில் இந்தத் திட்டத்தின்மூலம் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் பயன்பெறலாம் என்று விரிவுபடுத்தப்பட்டது.

9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்!!

பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்த பெருமை மதிய உணவுத் திட்டத்துக்கு உண்டு, அதன்பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக இது மாற்றம் பெற்றது.

திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை வாரத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர், அதிமுக ஆட்சியில் சுண்டல், பயறு வகைகள், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது இது பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றதை அடுத்து, 9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தினை விரிவுபடுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ரமேஷ் பொக்ரி தலைமையிலான குழு ஜூன் 10 ஆம் தேதி முடிவெடுத்தது.

From around the web