வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையில் கனமழை பெய்யுமா?

 

சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி இன்று உருவாகிறது என்று தகவல் வந்துள்ளது 

இதனை அடுத்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வீரியம் ஆனால் புயல் உருவாகும் வாய்ப்புள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

இருப்பினும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை வாய்ப்பு இருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டம் இருக்காது என்றே கருதப்படுகிறது 

From around the web