குறைந்தது கொரோனா: 2000க்கும் குறைந்த பாதிப்பு, உயிரிழப்பு 14 மட்டுமே: 

 

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1939  பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 754,460 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில மாதங்களுக்கு பின் தமிழகத்தில் 2000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 512 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 14 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 11454  பேர் பலியாகியுள்ளனர். 

corona

மேலும் தமிழகத்தில் இன்று 2572 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 725,258 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 72629 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 106,58,089 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web