மணமேடையில் மணமகளுக்கு முத்தம் கொடுத்த காதலன்: அருகில் இருந்த மணமகன் அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் மணமகள் ஒருவர் மேடையில் ஏறிய போது திடீரென அவருடைய காதலர் மணமகளுக்கு முத்தம் கொடுத்ததால் மணமகன் உள்பட திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் என்ற பகுதியில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க திட்டமிடப்பட்டது. மணமகன் மணமேடையில் காத்திருக்க, மணமகளை அவருடைய உறவினர்கள் அழைத்து வந்தனர் இந்த நிலையில் தாலி கட்டும் சடங்கு நடக்க இருந்த சமயத்தில் திடீரென
 

மணமேடையில் மணமகளுக்கு முத்தம் கொடுத்த காதலன்: அருகில் இருந்த மணமகன் அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் மணமகள் ஒருவர் மேடையில் ஏறிய போது திடீரென அவருடைய காதலர் மணமகளுக்கு முத்தம் கொடுத்ததால் மணமகன் உள்பட திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் என்ற பகுதியில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க திட்டமிடப்பட்டது. மணமகன் மணமேடையில் காத்திருக்க, மணமகளை அவருடைய உறவினர்கள் அழைத்து வந்தனர்

இந்த நிலையில் தாலி கட்டும் சடங்கு நடக்க இருந்த சமயத்தில் திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் மணமகளின் கையைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார். இதனால் மணமகன் உள்பட திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்

இதனையடுத்து அந்த நபரை எல்லோரும் அடிக்க முயற்சித்தபோது நானும் அந்த பெண்ணும் உயிருக்கு உயிராக எட்டு வருடம் காதலிக்கிறோம். எங்கள் காதலை ஏற்காமல் அவருடைய பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வருகிறார்கள். இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எனக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள் என்று கத்தினார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து காவல்துறை வந்து இதுகுறித்து விசாரணை செய்த போது மணமகளும் தான் அவரை காதலிப்பது உண்மைதான் என்றும் தன்னை கட்டாயப்படுத்தி தான் இந்த திருமணம் நடக்கிறது என்று கூறியதால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்

இதனை அடுத்து திருமணம் நின்றது. மணமகள் பெற்றோரிடம் செல்ல சம்பாதிக்காததையடுத்து, பெண் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web