தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலரும்: குஷ்பு

 

நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களே தான் பாஜகவில் சேர காரணம் என்றும் நாட்டிற்கு சேவை செய்யும் கட்சி எது என்பதை யோசித்து அக்கட்சியில் சேருங்கள் என்று அவர் கூறியதாகவும் இதனை அடுத்தே தான் பாஜகவில் சேர்ந்ததாகவும் குஷ்பு கூறினார்

ஆறு வருடங்கள் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டதாகவும் ஆனால் தன்னை அவர்கள் நடிகையாகவே பார்த்ததாகவும் காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சியில்லாத கட்சியாக இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார் 

மேலும் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பாடுபடுவேன் என்றும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலரும் என்றும் அவர் கூறினார். குஷ்புவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web