மீண்டும் லாட்டரி சீட்டு: அனுமதி அளித்தார் முதல்வர்!

 
lottery

கடந்த சில ஆண்டுகளாக லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முதல்வர் லாட்டரி சீட்டு அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த மன அமைதி தமிழகத்தில் அல்ல என்பதும் மத்தியபிரதேச மாநிலத்தில் என்பதும் குறிப்பிடதக்கது 

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் அனுமதி அளித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்காளம், காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், சிவசேனா கட்சியின் தலைமையில் ஆட்சி நடக்கும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து மாநில வரி வருவாயை பெருக்கும் வகையில் மத்திய பிரதேசம் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும் விரைவில் லாட்டரி சீட்டு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web