"நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு"கூறும் உலகநாயகன்!

தமிழகம் முழுவதுமே குறைகள் உள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறுகிறார்!
 

சட்டமன்றத்தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் 234 தொகுதிகளிலும் தனது  வேட்பாளரை அறிவித்து  உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலுவான கட்சியாக இருக்கும் திமுக கட்சி  கூட்டணியாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

kamal

இந்நிலையில் தனது நடிப்பாலும் தனது திறமையாலும்  மக்கள் மத்தியில் உலகநாயகன் என்று அழைக்கப்படுகிறார் நடிகர் கமலஹாசன். தற்போது அவர் அரசியலில் வந்துவிட்டார்.அரசியல் எனக்கு தொழில் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணியில் தேர்தல்சந்திக்க உள்ளார்.

ஹெலிகாப்டரில் மயிலாடுதுறைக்கு வந்து பிரச்சார வாகனத்தில் பிரச்சாரத்திற்கு சென்று இருந்தார். அப்போது அவர் கூறினார் நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு எனவும் அவர் கூறினார். மேலும் தமிழகம் முழுவதுமே குறைகள் உள்ளதாகவும் கூறினார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் என்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு ஓட்டை உள்ளதாகவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web