தனித்து போட்டி, நட்சத்திர வேட்பாளர்கள்: எல்.முருகனின் மெகா திட்டம்!

 

அதிமுக கூட்டணியில் தொடர்வதாக பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் அவ்வப்போது கூறி வந்தாலும் அவரது மனதில் இருக்கும் திட்டம் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தனி அணி அமைக்க வேண்டும் என்பது தான் என்று கூறப்படுகிறது 

இப்போதே தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மற்றும் மாவட்ட கூட்டங்களை நடத்தி வரும் எல் முருகன், வரும் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். மேலும் 60 தொகுதிகளிலும் நட்சத்திர போட்டியாளர்களை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது 

ஏற்கனவே பல திரையுலக பிரமுகர்களும் மாற்றுக் கட்சியில் இருந்த பிரபலங்களும் கட்சிகள் இணைந்து உள்ளதால் அவர்கள் அனைவருக்கும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 60 தொகுதிகளில் போட்டியிட்டால் 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும் பாஜக தலைவர்களுக்கு இருப்பதாக தெரிகிறது 

மேலும் பாமக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் இந்த மெகா திட்டத்தால் அதிமுக, திமுக கூட்டணிக்கு பாதிப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web