ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஜூன் 30 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு செய்துள்ளது. மேலும் மத்திய அரசு புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதனை தற்போது பார்ப்போம் ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம் மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க
 

ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஜூன் 30 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு செய்துள்ளது. மேலும் மத்திய அரசு புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதனை தற்போது பார்ப்போம்

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம்

மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை

பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடரும்

பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை

சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்

சர்வதேச விமான சேவை இல்லை

சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

From around the web