டெல்லியை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஒரு வாரம் லாக் டவுன்!காரணம் கொரோனா!

ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஒரு வாரம் ஊடரங்கினை அறிவித்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு!
 
டெல்லியை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஒரு வாரம் லாக் டவுன்!காரணம் கொரோனா!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் 2020 இறுதியில் இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.  தற்போது மீண்டும் இந்த கொரோனா எழுந்து  மிகப்பெரிய சோகத்தை தள்ளியது. இதற்காக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர். மேலும் ஒரு சில மாநிலங்களில்இரவு நேர ஊரடங்கு  நடைமுறையில் உள்ளன.

lockdown

இன்று முதல் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தினார். முன்னதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் காலவரையற்ற பள்ளிகள் மூடப்படும் என்றும் மறுஉத்தரவு வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அறிவித்திருந்தார்.இந்நிலையில் டெல்லியில் முன்னதாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில் ஊரடங்கு இருந்த  நிலையில் தற்போது நேற்றையதினம் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் மாநில அரசும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு என்பதனை அறிவித்துள்ளது.  அம்மாநில அரசு ஏப்ரல் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை தளர்வுகள் உடன் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

From around the web