"உள்ளாட்சித் தேர்தல்" எந்த வித கூட்டணியும் இல்லாமல் "தேமுதிக" தனித்துப் போட்டி!!

உள்ளாட்சித் தேர்தலில் எந்த வித கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தேமுதிக அறிவிப்பு
 
dmdk

கடந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சியுடன் கூட்டணி வைத்தது. அதிலும் குறிப்பாக அதிமுக கட்சியுடன் முன்பதாக கூட்டணி என்ற பேச்சு வார்த்தையில் இருந்து பின்னர் விலகியது தேமுதிக. மேலும் அவர்கள் கேட்ட தொகுதி அதிமுக தர முன் வராததால் கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக. அதன்பின்னர் தேமுதிக அமமுக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. vijayakanth

ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக திமுக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடவுள்ளதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும் தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள்  விருப்பமனு விநியோகம் நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இரண்டு நாட்களுக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

From around the web