லிவ்விங் ரிலேஷன்ஷிப் புக்கு நோ! டாட்டா போட்ட உயர்நீதிமன்றம்!!

திருமணமாகாமல் சேர்ந்து வாழும் லிவிங் இன் உறவு முறை என்பது ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளது பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்!
 
லிவ்விங் ரிலேஷன்ஷிப் புக்கு நோ! டாட்டா போட்ட உயர்நீதிமன்றம்!!

முன்னொரு காலத்தில் திருமணம் என்றால் நாள் பார்த்து நேரம் பார்த்து நிச்சயித்து அதன் பின்னர் ஊர் கூடி உறவினர்கள் மத்தியில் நடைபெறும். காலங்கள் செல்ல செல்ல திருமணங்களின் இத்தகைய நிகழ்வுகளும் குறைந்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே கலந்து கொள்ளும் முறையும் வந்தது. இதனையெல்லாம் தாண்டி தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுவது லிவ்விங் ரிலேஷன்ஷிப். திருமணமாகாத பெண்ணும் திருமணமாகாதஆணும் திருமணத்துக்கு முன்னரே ஒரே குடியிருப்பில் வசித்து அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதே ஆகும்.living in relation

மேலும் இதில் ஈடுபடும் பலரும் திருமணத்தினை செய்யாமல் பொழுதுபோக்காகவே இந்த ரிலேஷன்ஷிப் ஐ  மேற்கொண்டு முடிவில் அந்த உறவை முடித்து விடுகின்றனர். மேலும் இது தற்போது உள்ள காதலர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் மெட்ரோ என்றழைக்கப்படும் சென்னை பெங்களூர் போன்ற தலைநகரங்களிலும் இவை அதிகமாக காணப்படுகிறது. மேலும் இவை தற்போது சகஜமாகவே காணப்படுகின்றன. ஆனால் ஒரு சில பகுதிகளில் இதற்கு எதிராக பல்வேறு குரல்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து வழக்கு ஒன்று பஞ்சாப் -ஹரியானா நீதிமன்றத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். அதன்படி திருமணமாகாமல் சேர்ந்து வாழும் லிவிங் இன் உறவுமுறையை ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்கதல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கு ஒன்றில் இத்தகைய தீர்வினையும் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் கொடுத்துள்ளது.

அதன்படி அந்த உயர் நீதிமன்றத்தில் 19 வயதான பெண்ணும்  22 வயதான ஆணும் சேர்ந்து வாழ்வதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக மனுவில் கூறப்பட்டது. ஆனால் பெண் பெண்ணின் தாயாரிடம் இருந்து தங்களுக்கு தினந்தோறும் அச்சுறுத்தி வருவதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் பெண்ணின் வயது குறித்த ஆவணங்கள் அவரது தாயாரிடம் சிக்கிக்கொண்டதால் திருமணம் செய்ய இயலவில்லை என்பது தெரிய வந்தது. ஆனால் இது போன்ற வாழ்க்கை முறை ஏற்புடையது அல்ல என்கிற கருத்தை வெளியிட்டு நீதிமன்றம் அவர்களின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

From around the web