இந்திய வரலாற்றில் முதல் முறையாக யூடியூபில் நேரலை: குஜராத் நீதிமன்றம் அதிரடி

 

கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில மாதங்களாக நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு வழக்கின் விசாரணையை யூடியூபில் வழியாக நேரலையாக நீதிமன்றம் ஒளீபரப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

குஜராத் தலைமை நீதிபதிகள் அமர்வு இன்று ஒரு வழக்கின் விசாரணையை  ஜூம் செயலி மூலமாக விசாரணை செய்தது. இந்த விசாரணையை அப்படியே யூடியூபில் நேரடியாகவும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதன்மூலம் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வழக்கு தொடுத்தவர் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

இந்திய வரலாற்றில் முதல் முறையாக நேரலை ஒளிபரப்பில் வழக்கு விசாரணை யூடியூபில் ஒளிபரப்பாகி உள்ளது குஜராத் பொதுமக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web