சிறிய இடி! பெரிய இழப்பு! உரிமையாளர் சோகம்!இடிதாக்கி தீவிபத்து!

இடிதாக்கி பெருமாள் என்பவருக்கு சொந்தமான பஞ்சு கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டு பொருட்கள் நாசம்!
 
சிறிய இடி! பெரிய இழப்பு! உரிமையாளர் சோகம்!இடிதாக்கி தீவிபத்து!

தமிழகத்தில் இன்று காலை முதலே பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தன. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். மேலும் கோடை வெப்பத்தை தனித்த ஆகவும் அவர்கள் எண்ணி சந்தோஷத்தில் இருந்தனர். மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலையும் அளித்திருந்தது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது.இதனால் தமிழக மக்கள் கோடை காலத்தில் மழை பெய்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

cotton

மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் இந்த மழை  அவர்களுக்குப் பெரிதும் உதவுவதாக எண்ணி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் மதிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ் மக்களுக்கு மற்றும் ஒரு மகிழ்ச்சியான இன்பமான தகவலை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியிருந்தது.

அதன்படி மதுரை, தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. மேலும் கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.  ஈரோட்டில் மழை பெய்ததால் ஒருவருக்கு பல லட்ச ரூபாய் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டது. ஈரோடு அருகே சித்தோட்டில் மழையின் போது இடி தாக்கி பெருமாள் என்பவருக்கு சொந்தமான பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனால் பெரும் சோகத்தில் உள்ளார் .மேலும் சிறிது நேரம் மழை பெய்து  அவரது குடும்பத்தில் பல லட்ச ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் எரிந்து போனது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web