இன்றுமுதல் புதுச்சேரியில்  மதுபானங்கள் பழைய விலைக்கு விற்பனை!

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி  நீக்கப்பட்டதாக கலால் துறை அறிவித்துள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.இதில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வேட்பாளர்கள் பலரும் வாக்காளர்கள் பலரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினர். மேலும் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு விதமாக அவர்களுக்கு கையுறை, முககவசம், சனிடைசர் போன்றவை கொடுக்கப்பட்டு பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலையானது கணக்கிடப்பட்டு வாக்களிக்க அறிவித்தனர்.

tasmac

சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் புதுச்சேரியில் 144 தடை போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 72 மணி நேரத்திற்கு மதுபான கடைகள் மூடப்பட்ட தாகமும் சீல் வைக்கப்பட்டது.

 மேலும் தற்போது புதுச்சேரி மது பானங்களுக்கு, மதுபான கடைகளுக்கு பயனளிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் மதுபானங்கள் மீது போடப்பட்ட கொரோனா வரி தற்போது நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல கொரோனாகாலகட்டத்தில்  அனைத்து மாநிலங்களில் இருந்து பாண்டிச்சேரிக்கு  வந்ததால் கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியின் வெளிமாநிலத்தினரின் எண்ணிக்கை குறைந்து வருமானமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா வரி நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web