இரண்டு நாட்களுக்கு லேசான மழை ஆனால் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்!

தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
இரண்டு நாட்களுக்கு லேசான மழை ஆனால் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்!

கோடைகாலம் என்றாலே அனைவரும் மனதில் நிலவுவது மிகுந்த அச்சம் மட்டுமே.ஏனென்றால் இந்த கோடைகாலம் தொடங்கினால் தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் தாக்கமானது இயல்புகளை காட்டிலும் அதிகமாக காணப்படும். மேலும் ஒரு சில பகுதிகளில் வெப்பநிலையானது அதிகரித்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் தாக்கமானது  அதிகமாக காணப்படும். இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருப்பர். மேலும் ஒரு சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதும் காணப்படும்.weather

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால் மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். மேலும் அப்பகுதியில் வெயில் தாக்கம் குறைக்கப்பட்டதாகவும் உஷ்ணமான சூழ்நிலையை தவிர்க்க பட்டதாகவும் எண்ணி கோடை மழையை அன்போடு வரவேற்றனர். இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக மாவட்டங்கள் ஓரளவு மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளது.

அதன்படி  நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் சோகத்தை அளித்துள்ளது. அதன்படி சென்னையில் 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது. மேலும் சென்னையில் அதிக வெப்ப நிலையானது 36 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதனால் வானிலையும் சென்னையை சோதிக்கிறது தெரியவந்துள்ளது.

From around the web