இன்று லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்தது. எங்கு பார்த்தாலும் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலையைக் காண முடிந்தது. அதன்பிறகு வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இது வானிலை ஓரளவு குளிர்ச்சியாக வைத்தது மட்டுமின்றி, ஓரளவு குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்தது. இதனைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இது தமிழக மக்களுக்கு நிம்மதி பெருமூச்சை அளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை
 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்தது. எங்கு பார்த்தாலும் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலையைக் காண முடிந்தது. 

அதன்பிறகு வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இது வானிலை ஓரளவு குளிர்ச்சியாக வைத்தது மட்டுமின்றி, ஓரளவு குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்தது. 

இன்று லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

இதனைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இது தமிழக மக்களுக்கு நிம்மதி பெருமூச்சை அளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தெரிவித்துள்ளது. 

அதன்படி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று(ஜூலை 29) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. அப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

From around the web