எதிர்க்கட்சியாக இருந்தாலும் சொன்ன வாக்கை காப்பாற்றுவோம்! "ஒரு கோடி நிவாரண நிதி"

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி வழங்கப்பட்டது!
 
எதிர்க்கட்சியாக இருந்தாலும் சொன்ன வாக்கை காப்பாற்றுவோம்! "ஒரு கோடி நிவாரண நிதி"

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படுகின்ற திமுக. மேலும் முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் ஆட்சியின் தொடக்கத்திலேயே பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.jayakumar

 தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரு வார காலத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன முதல்வர் முக ஸ்டாலினுக்கு நிவாரண நிதியாக பல்வேறு நடிகர்கள் பிரபலங்கள் போன்றோரும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தங்களால் இயன்ற பணத்தை கொடுக்கின்ற நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவும் நிவாரண நிதியாக ஒரு கோடி வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

அந்த ஒரு கோடி தற்போது வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி வழங்கப்பட்டது. மேலும் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சந்தித்து ஒரு கோடிக்கான காசோலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

மேலும் அவர் சிலவற்றை கூறினார். அதன்படி ஆக்கபூர்வ எதிர்க் கட்சியாக அதிமுக செயல்படும் என்றும் ஆளும் கட்சிக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தருவோம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்தது வரவேற்கத்தக்கது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

From around the web