நாளையில் இருந்து வெளியே வரலாம்! ஆனால் தேவையின்றி வெளியே வரக்கூடாது!!

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி 
 
lockdown

தற்போது தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனாபாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இது மக்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நம் தமிழகத்தில் எத்தனை அச்சமின்றி தான் ஆட்சிக்கு வந்தவுடன் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தி இந்த நோயினை கட்டுப்படுத்தியது திமுக. இதனால் திமுகவிற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் நாளை முதல்  பல தளர்வு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.chennai

அந்த படி இறுதி சடங்கு ஊர்வலத்தில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், திருமண விழாவில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் ,வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது என்றும் உள் மாவட்டங்களில் . இ பதிவு தேவை என்றும் கூறப்படுகிறது. சென்னை ஆணையர் சிலவற்றை பேட்டியளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் முன்னதாக குப்பைகளை சுத்தம் செய்யும் பணியினை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அதன்படி சென்னைவாசிகள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு தளர்வு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகர ஆணையர்  கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பு விதிகளை சென்னைவாசிகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் அதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்தால் சென்னையில் பாதிப்பு குறைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒருவர் மாஸ்க் அணியாவிட்டால் சம்பந்தப்பட்டவரை மாஸ்க் அணிய மக்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

From around the web