நீண்ட இடைவெளிக்கு பின் 4000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு

 

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் 4000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3914 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 687,400 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று 1,036 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், சென்னையில் 1,359  பேர் இன்று குணமடைந்தனர் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 56 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 10642 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 4929 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 637,637 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 88643 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 86,96,455 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web