கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. அந்த 234 தொகுதிகளிலும் பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.மேலும் இந்த 234 தொகுதிகளில் எல்லாம் தேர்தல் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

dmk

மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவர் தமிழகம் முழுவதும் சென்று தனது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேதாரண்யத்தில்  திமுக வேட்பாளர் வேதரத்தினம் போட்டியிடவுள்ளார் மேலும் கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் நாகை தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ஆளூர்  ஷாநவாஸ், திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்துவை ஆதரித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் கூறினார்  மீனவர்களுக்கு இரண்டு லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் உயர்த்தி தரப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் கஜா புயல் நிவாரணம் கேட்டு போராடி மீது போடப்பட்ட வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறப் படும் எனவும் ஸ்டாலின் கூறினார்.

From around the web