வழக்கறிஞர்கள்  கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. வழக்கமான நடைமுறைகள் மாற்றப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல நடவடிக்கைகள் மாற்றப்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கருப்பு கவுன் அணிய தேவையில்லை என்று சென்னை நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 

வரும் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் கருப்பு கவுன் அணிய தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளை சட்டையுடன் நெக்பேண்ட் பேண்ட் மட்டும் அணிந்து நேரடியாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் அளித்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனுமதியால் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது 

From around the web