மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மீண்டும் திறப்பு!

பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டது!
 

தனது திறமையாலும் தனது தைரியத்தாலும் இன்று மக்கள் மனதில் அம்மா என்று அழைக்கப்படுகிறார் மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா. ஆட்சியில் இருக்கும் போதே மறைந்தார் என்பது அனைவருக்கும்  வேதனையை தந்தது.  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த முதல்வர் என்ற பெயரும் குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்த பெண் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு சாரும்.

jayalalitha

மேலும் இவர் தான்  இரும்பு பெண்மணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் திட்டமானது அனைத்து ஏழை மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவரது காலத்தையே தமிழகத்தின் பொற்காலம் என்ற அளவிற்கு மிகவும் திறமையுடன் ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது மறைவுக்குப் பின்னர் நினைவிடம் ஒன்றும் கட்டப்பட்டது. அந்த நினைவிடம் ஆனது ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்டது. பராமரிப்பு பணிக்காக நீண்ட நாட்களாக அந்த நினைவிடம்  மூடப்பட்டு இருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவேற்றம் நிறைவு பெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் தற்போது செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டதக தகவல் இது இதனால் கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்கள் அனைவரும் சென்று அதை பார்க்கின்றனர்.

From around the web