கோழிக்கோடு விமான விபத்தில் ரத்ததானம் கொடுக்க நள்ளிரவிலும் குவிந்த பொதுமக்கள்!

நேற்று இரவு துபாயில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் 191 பயணிகளுடன் பயணம் செய்த நிலையில் திடீரென கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டாகப் பிளந்து அதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த துணை விமானியும் உயிரிழந்தார் இந்த நிலையில் 191 பயணிகளின் கதி என்ன ஆயிற்று என்பது குறித்த அச்சம் ஏற்பட்டது இந்த விபத்தில் பலியானவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்க, மீட்பு படையினர் தீவிரமாக
 

கோழிக்கோடு விமான விபத்தில் ரத்ததானம் கொடுக்க நள்ளிரவிலும் குவிந்த பொதுமக்கள்!

நேற்று இரவு துபாயில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் 191 பயணிகளுடன் பயணம் செய்த நிலையில் திடீரென கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டாகப் பிளந்து அதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த துணை விமானியும் உயிரிழந்தார்

இந்த நிலையில் 191 பயணிகளின் கதி என்ன ஆயிற்று என்பது குறித்த அச்சம் ஏற்பட்டது இந்த விபத்தில் பலியானவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்க, மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை 15 பேர் இந்த விமான விபத்தில் பலியாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அதிக ரத்தம் தேவைப்படுவதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து கோழிக்கோடு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக இரத்த தானம் செய்ய முன்வந்தனர்

கடும் மழை மற்றும் வெள்ளம் இருந்தபோதிலும் நள்ளிரவு நேரத்திலும் ரத்ததானம் கொடுப்பதற்காக பொதுமக்கள் வரிசையில் நின்ற என்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web