வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி புகுந்தது திமுகவினர் தர்ணா!

திருவள்ளூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இரவு 12 மணி அளவில் லாரி சென்றதால் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 
வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி புகுந்தது திமுகவினர் தர்ணா!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவித்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது.இந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சி வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிகமாக வேட்புமனுவை தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பலரும் புதிது புதிதாக கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் மிகவும் வலிமையாக எதிர்கட்சியான திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலில் சந்தித்துள்ளது.

dmk

மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் தனது வேட்பு மனுவை கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பரப்புரையில் தமிழக முழுவதும் சென்று ஈடுபட்டார். மேலும் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலை நடத்த முடிந்தது.

சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பல பகுதிகளில் சில சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில் தற்போதும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றதாக தகவல். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.திருவள்ளூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இரவு 12 மணி நேர அளவில் லாரி ஒன்று சென்றதால் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது. மேலும் நள்ளிரவில்  சென்ற லாரியை திமுகவினர் பிடித்தனர் .அதன் பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவடியில் உள்ள டீக்கடைகளில் அவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டதாக திமுக வேட்பாளர் நாசர் புகார் அளித்துள்ளார்.

From around the web