ஆக்சிசன் பற்றாக்குறையா? 5 நோயாளிகள் உயிரிழப்பு!டீன் மறுப்பு!

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் பற்றாக்குறையால் 5 பேர் இறந்ததாக புகார்!
 
ஆக்சிசன் பற்றாக்குறையா? 5 நோயாளிகள் உயிரிழப்பு!டீன் மறுப்பு!

மக்கள் மத்தியில் தற்போது வலம் வந்துள்ள கொரோனா மிகவும் தீவிரமாக உருமாறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் கொரோனா நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாட்டில் தளர்த்து கொரோனா  நோய் தாக்கமானது மிகவும் வீரியமாக வேகமாக பரவுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் மத்திய அரசின் சார்பில் கொரோனா  தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் இந்தியாவில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் மத்திய அரசின் சார்பில் இருந்து அனுப்பப்படுகின்றன. ஒரு சில மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டு உள்ளன.

O2

மேலும் கொரோனா உள்ளவர்களுக்கு சிகிச்சையின்போது மூச்சுத்திணறல் ஏற்படும். அதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படும் நிலையில் சில தினங்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இருந்ததாக புகார்.

 சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு வார்டில் ஆக்சிசன் விநியோகத்தில் தடை என நோயாளிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.சிறப்பு வார்டில் உள்ள நோயாளிகளை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 2 மணிநேரமாக முறையாக ஆக்சிஜன் வரவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை என மருத்துவமனையின் டீன் செல்வி விளக்கமளித்துள்ளார்.

From around the web