பைக், மொபைல் வாங்குவதற்காக 3 மாத குழந்தையை விற்ற தந்தை: அதிர்ச்சி தகவல்

நவீன மொபைல் மற்றும் லேட்டஸ்ட் பைக் வாங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு தனது மூன்று மாத குழந்தையை விற்பனை செய்த பெற்றோர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பெங்களூரில் உள்ள ஒரு தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெண் குழந்தை என்பதால் வெறுப்படைந்த தம்பதியினர் மருத்துவமனையிலேயே அந்த குழந்தையை விற்க முயற்சித்தார்கள். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு கண்டனம் தெரிவித்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தது இந்த நிலையில் புரோக்கர் ஒருவர்
 

பைக், மொபைல் வாங்குவதற்காக 3 மாத குழந்தையை விற்ற தந்தை: அதிர்ச்சி தகவல்

நவீன மொபைல் மற்றும் லேட்டஸ்ட் பைக் வாங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு தனது மூன்று மாத குழந்தையை விற்பனை செய்த பெற்றோர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெங்களூரில் உள்ள ஒரு தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெண் குழந்தை என்பதால் வெறுப்படைந்த தம்பதியினர் மருத்துவமனையிலேயே அந்த குழந்தையை விற்க முயற்சித்தார்கள். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு கண்டனம் தெரிவித்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தது

இந்த நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் தனது குழந்தையை அந்த குழந்தையின் பெற்றோர் ரூபாய் ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. இந்த பணத்தில் நவீன மொபைல் போன் மற்றும் பைக் வாங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் குழந்தையை மீட்டனர்

குழந்தையின் தந்தை தலைமறைவாகி விட்டதாகவும் தாயிடம் மற்றும் போலீசார் விசாரணை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பெற்ற குழந்தையை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web