தடையை மீறி திருத்தணி புறப்பட்ட எல்.முருகன்: வேல் யாத்திரை என்ன ஆகும்?

 

தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்ட நிலையில் தடையை மீறி யாத்திரையை நடத்துவோம் என பாஜகவினர் தெரிவித்து இருந்தனர் 

அந்த வகையில் சற்று முன்னர் வேல் யாத்திரைக்காக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் திருத்தணி புறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தணி புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த எல் முருகன், ‘கடவுள் முருகன் துணையோடு வேல் யாத்திரையை தொடங்குவோம் என்றும் முருகனுக்கு எதிராக இருப்பவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்றும் கூறினார் 

கையில் வேலுடன் காரில் பாஜக தலைவர் எல்முருகன் அவர்கள் திருத்தணி புறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்குபவர்களை கைது செய்ய காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது இருப்பினும் திருத்தணியில் ஒரு பதட்டமான சூழ்நிலையை இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்

From around the web