இன்று மாலை முதல்வரை சந்திக்கின்றார் எல்.முருகன் : கூட்டணி பேச்சுவார்த்தையா?

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று மாலை பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் சந்திக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை அவர் தான் எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இரு தரப்பிலும் பேசிவருகின்றனர். குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் திடீரென திமுகவுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் இன்று மாலை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எல்.முருகன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூட்டணியை அவர் உறுதி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது அவர் இந்த சந்திப்பு குறித்து விளக்கமாக கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web