இந்தியாவுக்கு உதவிக் கரம் கொடுக்கும் குவைத் அரசாங்கம்!

இந்தியாவுக்கு ஆக்சிசன் வழங்க  குவைத் அரசாங்கம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
 
இந்தியாவுக்கு உதவிக் கரம் கொடுக்கும் குவைத் அரசாங்கம்!

தற்போது இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் இதற்கு எதிராக போராடும் வகையில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு அரசு மருத்துமனைக்கு தடுப்பூசி  அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிஜன்  தேவைப்படுகின்றன. மேலும் தற்போது இந்தியா முழுவதும் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. மேலும் இதற்காக ஆக்சிஜன்  உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாகவும் மத்திய அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன் கூறப்பட்டது. நேற்றைய தினம் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து அந்த ஆலையில் இருந்து ஆக்சிஜன்  உற்பத்தி அதிகரிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.oxygen

எனினும் இந்தியாவிற்கு பல நாடுகளிலிருந்து ஆறுதலும் பிரார்த்தனைகளும் மட்டுமின்றி நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் நேற்றைய தினம் கூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் தேவையான நிதியுதவியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிலையில் தற்போது இந்தியாவில்உள்ள இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் நாடாக காணப்படுகிறது குவைத் அரசாங்கம். மேலும் இந்த நாட்டில் இந்தியாவை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

தற்போது இந்தியாவிற்கு உதவி செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆக்சிசன் வழங்க குவைத்  அரசாங்கம் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக குவைத்  அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு பல நாடுகளிலிருந்தும் உதவிகள் பெறப்படுகிறது

From around the web