படையப்பா படம் பார்த்தால் தான் பரிட்சையில் நன்றாக எழுதுவார்: மகள் குறித்து பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து திரையுலகமே கொண்டாடி வருகிறது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் குறித்த பெருமைகளையும் அவருடன் நடித்த அனுபவங்களையும் பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பகிர்ந்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகை குட்டிபத்மினி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னைவிட எனது குடும்பத்தில் இருப்பவர்கள் ரஜினியின் தீவிரமான என்றும், குறிப்பாக எனது இரண்டாவது மகள் ரஜினியின் வெறித்தனமான ரசிகை என்றும், ரஜினி
 

படையப்பா படம் பார்த்தால் தான் பரிட்சையில் நன்றாக எழுதுவார்: மகள் குறித்து பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து திரையுலகமே கொண்டாடி வருகிறது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் குறித்த பெருமைகளையும் அவருடன் நடித்த அனுபவங்களையும் பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பகிர்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை குட்டிபத்மினி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னைவிட எனது குடும்பத்தில் இருப்பவர்கள் ரஜினியின் தீவிரமான என்றும், குறிப்பாக எனது இரண்டாவது மகள் ரஜினியின் வெறித்தனமான ரசிகை என்றும், ரஜினி மீது பைத்தியம் என்றே சொல்லலாம் என்றும் கூறினார்.

மேலும் தனது இரண்டாவது மகள் பரிட்சை என்றால் கூட முந்தைய நாள் இரவு ரஜினி நடித்த படையப்பா படம் பார்த்துவிட்டு தான் மறு நாள் காலை பரீட்சை எழுத அவர் சொல்லுவார் என்றும், படையப்பா படம் பார்த்தால் தான் தன்னை நன்றாக பரிட்சை எழுத முடியும் என்று அவர் கூறுவார் என்றும், அந்த அளவுக்கு அவர் ரஜினி மீது பைத்தியமாக ரசிகையாக இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். குட்டி பத்மினியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

From around the web