எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை: கொந்தளித்த குஷ்பு

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்தையும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்தையும் கூறுவதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனை அடுத்து அவர் பாஜகவில் விரைவில் சேருவார் என்றும் சிலர் வதந்தியை கிளப்பி விட்டு வருகின்றனர். ஆனால் இந்த வதந்திகளுக்கு அவ்வப்போது நடிகை குஷ்பு மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்பியும், தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்களுக்கு
 

எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை: கொந்தளித்த குஷ்பு

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்தையும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்தையும் கூறுவதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனை அடுத்து அவர் பாஜகவில் விரைவில் சேருவார் என்றும் சிலர் வதந்தியை கிளப்பி விட்டு வருகின்றனர். ஆனால் இந்த வதந்திகளுக்கு அவ்வப்போது நடிகை குஷ்பு மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்பியும், தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்த இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் திமுக தலைவர் முக ஸ்டாலின், டிஆர் பாலு, கனிமொழி உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிலையில் மாற்றுக் கட்சி தலைவர்களுக்கு கூட தகவல் தெரிவித்த நிலையில் தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் பரபரப்பான ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டில், ‘தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் ஒரே ஒரு தேசிய செய்தி தொடர்பாளர் நான் மட்டுமே. வசந்தகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு குறித்து எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை? கட்சியை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனமாக கூடாது. என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web