குளத்துக்குள் அத்திவரதரை வைக்கும் முறை இதுதான்!!

47 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த அத்திவரதர் மீண்டும் இன்றிலிருந்து அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட இருக்கிறார். இன்றையதினம் காலை மற்றும் மாலை ஆகமவிதிப்படி அவருக்கு பூஜை நடக்கும். இன்று இரவு 10 மணிக்குமேல் பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி எடுத்த தைலத்தினை அத்திவரதர் சிலைமீது பூசப்படும். அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது எந்தவித சேதாரமுமின்றி அடுத்த 40 ஆண்டுகள் இருக்க வேண்டும்
 
குளத்துக்குள் அத்திவரதரை வைக்கும் முறை இதுதான்!!

47 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த அத்திவரதர் மீண்டும் இன்றிலிருந்து அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட இருக்கிறார். இன்றையதினம் காலை மற்றும் மாலை ஆகமவிதிப்படி அவருக்கு பூஜை நடக்கும். இன்று இரவு 10 மணிக்குமேல் பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி எடுத்த தைலத்தினை அத்திவரதர் சிலைமீது பூசப்படும்.

அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது எந்தவித சேதாரமுமின்றி அடுத்த 40 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தைலபூச்சு பூசப்படுகிறது. இந்த தைலம் பூசப்படுவதால் நீரினாலோ அல்லது நீர்வாழ் உயிரினங்களாலோ சிலைக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது.

குளத்துக்குள் அத்திவரதரை வைக்கும் முறை இதுதான்!!

இன்று மாலை நித்தியப்படி பூஜை முடிந்தபிறகு அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும். இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படும். செங்கல் தரையில், தலைக்கு கருங்கல் தலையணையாய் இருக்க அத்திவரதர் வைக்கப்படுவார். அத்திவரதர் சிலை அதிகம் கனம் என்பதால் நீரின் மேல் வர வாய்ப்பில்லை. ஆனாலும், அத்திவரதர் சிலைமீது 7 நாகர்சிலைகள் வைக்கப்படும். பின்னர், அருகிலிருக்கும் கோவில் கிணற்றிலிருந்து நீராழி மண்டபத்தில் நீர் நிரப்பப்படும். நீராழி மண்டபம் நிறைந்தபின் மூடி சிமெண்ட் பலகைகள், இரும்புகம்பிகள் வைக்கப்பட்டு அனந்த சரஸ் திருக்குளம் நீரினால் நிரப்பப்படும்.

குளத்துக்குள் அத்திவரதரை வைக்கும் முறை இதுதான்!!

இது அந்தரங்க விஷயமென்பதால் ஒருசில அர்ச்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கடந்தமுறை அந்த சரஸ் புஷ்கரணி திருக்குளம் மழை நீராலாயே நிரம்பியதாக வயதானவர்கள் சொல்கின்றனர். இந்தமுறை என்ன நடக்குமென இறைவன் மட்டுமே அறிவார்.

குளத்துக்குள் அத்திவரதரை வைக்கும் முறை இதுதான்!!

அத்திவரதர் வைபவம் சிறப்புற நடக்க அரும்பாடுபட்ட காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.

இனிவரும் 40 ஆண்டுகளுமே அத்திவரதர் நம்மோடு இருந்து நமக்கு எல்லா வளமும் கொடுப்பார்.


From around the web