திமுக கூட்டணியில் இணைய கமல், ரஜினிக்கு அழைப்பு விடுத்த பிரபல அரசியல் தலைவர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், ரஜினி ஆரம்பிக்க இருக்கும் கட்சியும் வரும் சட்டமன்றா பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது இந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளை ஒரு சில கூட்டணிகள் இழுக்க முயற்சித்து வருகின்றன. ஏற்கனவே பாஜக ரஜினியை இழுக்கவும், திமுக கமல்ஹாசனின் கட்சியை இழுக்கவும் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள்
 
திமுக கூட்டணியில் இணைய கமல், ரஜினிக்கு அழைப்பு விடுத்த பிரபல அரசியல் தலைவர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், ரஜினி ஆரம்பிக்க இருக்கும் கட்சியும் வரும் சட்டமன்றா பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது

இந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளை ஒரு சில கூட்டணிகள் இழுக்க முயற்சித்து வருகின்றன. ஏற்கனவே பாஜக ரஜினியை இழுக்கவும், திமுக கமல்ஹாசனின் கட்சியை இழுக்கவும் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கமல் மற்றும் ரஜினிக்கு தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். எங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கட்சி எங்கள் கூட்டணியில் இணைந்தால் அதனை வரவேற்போம் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்

மேலும் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முக ஸ்டாலின் தான் என்றும் அவர் அறிவித்துள்ளார். கமல் மற்றும் ரஜினி கட்சிகளை திமுக கூட்டணிக்கு கே.எஸ்.அழகிரி அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web