கோயம்பேடு சந்தை திறக்கப்படுமா? நீதிமன்றத்தில் சிஎம்டிஏ தகவல்

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை தற்போது திறக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூடப்பட்ட கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. மேலும் இதுகுறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது இந்த மனுவிற்கு பதிலளித்த சிஎம்டிஏ,
 
கோயம்பேடு சந்தை திறக்கப்படுமா? நீதிமன்றத்தில் சிஎம்டிஏ தகவல்

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை தற்போது திறக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூடப்பட்ட கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. மேலும் இதுகுறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது இந்த மனுவிற்கு பதிலளித்த சிஎம்டிஏ, கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை என்றும் உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சிலை அகற்றவும் இப்போதைக்கு முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கு ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்

ஏற்கனவே கோயம்பேடு சந்தை காரணமாகத்தான் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web