கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று ஸ்டாலின் ஆறுதல்

கோவை மாநகரத்தின் துடியலூர் அருகே பன்னிமடை கிராமத்தை சேர்ந்த ஒரு 6 வயது சிறுமி கடந்த வாரம் வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போய் விட்டார். காவல் நிலையத்தில் புகார் செய்த பின் காவல்துறையினரும் நீண்ட நேரம் தேடியபோது இரண்டு மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருப்பதை அறிந்தனர். தமிழ்நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த விஷயம். சம்பவம்
 

கோவை மாநகரத்தின் துடியலூர் அருகே பன்னிமடை கிராமத்தை சேர்ந்த ஒரு 6 வயது சிறுமி கடந்த வாரம் வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போய் விட்டார்.

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று ஸ்டாலின் ஆறுதல்

காவல் நிலையத்தில் புகார் செய்த பின் காவல்துறையினரும் நீண்ட நேரம் தேடியபோது இரண்டு மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருப்பதை அறிந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த விஷயம்.

சம்பவம் நடைபெற்று சில நாட்களாகிய நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் பிடிபட்டான்.

தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

இந்நிலையில் அந்த சிறுமியின் வீட்டுக்கு இன்று சென்ற ஸ்டாலின் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிறுமியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

From around the web