கோவாக்சின் தடுப்பூசியும் திடீர் விலையேற்றம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 
கோவாக்சின் தடுப்பூசியும் திடீர் விலையேற்றம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்துவது ஒன்றே பாதுகாப்பானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன

covaxin

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி விலையும் திடீரென அதிகரித்துள்ளது அரசு மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ஏற்றி நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசியில் விலை ஏறியுள்ளது 

ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி ரூ.600 என மாநில அரசுகளுக்கும் ரூ.1200 என தனியார் மருத்துவமனைகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த விலையேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் சேவை மனப்பான்மையில் குறைந்த விலையில் வழங்க வேண்டிய தடுப்பூசி விலை ஏற்றம் செய்யப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது


 

From around the web