குப்பையில் வீசிய ஐந்து லாட்டரி டிக்கெட்டுக்கும் கோடிக்கணக்கில் பரிசு!

தான் வாங்கிய ஐந்து லாட்டரி சீட்டுகளுக்கு எந்தவிதமான பரிசுகளும் விழவில்லை என நினைத்து குப்பையில் வீசிய ஒரு நபர் அதே லாட்டரி சீட்டுகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததை அறிந்ததும் குப்பையில் அந்த லாட்டரிச் சீட்டுகளை தேடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொல்கத்தாவை சேர்ந்த சாதிக் என்பவர் சமீபத்தில் புத்தாண்டு சிறப்பு குலுக்கள் லாட்டரி சீட்டு 5 வாங்கினார். அதன் பின்னர் குலுக்கல் முடிந்தவுடன் லாட்டரி கடைக்குச் சென்று தன்னுடைய சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என
 
குப்பையில் வீசிய ஐந்து லாட்டரி டிக்கெட்டுக்கும் கோடிக்கணக்கில் பரிசு!

தான் வாங்கிய ஐந்து லாட்டரி சீட்டுகளுக்கு எந்தவிதமான பரிசுகளும் விழவில்லை என நினைத்து குப்பையில் வீசிய ஒரு நபர் அதே லாட்டரி சீட்டுகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததை அறிந்ததும் குப்பையில் அந்த லாட்டரிச் சீட்டுகளை தேடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொல்கத்தாவை சேர்ந்த சாதிக் என்பவர் சமீபத்தில் புத்தாண்டு சிறப்பு குலுக்கள் லாட்டரி சீட்டு 5 வாங்கினார். அதன் பின்னர் குலுக்கல் முடிந்தவுடன் லாட்டரி கடைக்குச் சென்று தன்னுடைய சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என கடைக்காரரிடம் கேட்டுள்ளார். கடைக்காரர் கவனக்குறைவாக பார்த்து இந்த சீட்டுகளுக்கு பரிசு விழவில்லை என்று கூறியிருக்கிறார்

இதனை அடுத்து வீட்டிற்கு வந்த சாதிக் 5 சீட்டுகளையும் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். இதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கடைக்காரர் சாதிக் வீடு தேடி வந்து நீங்கள் வாங்கிய 5 சீட்டுக்கும் பரிசுகள் விழுந்து உள்ளது என்றும் அதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ளது என்றும் கூறியுள்ளார்

இதனை அடுத்து சாதிக்கும் அவருடைய மனைவியும் குப்பையில் போட்ட லாட்டரி டிக்கெட்டுக்களை பல மணி நேரம் தேடி ஒருவழியாக கண்டுபிடித்தனர். அதன்பின் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்

சாதிக் வாங்கிய ஒரு டிக்கெட்டுக்கு ஒரு கோடி ரூபாயும் மீதமுள்ள நான்கு டிக்கெட்டுக்களுக்கு தலா ஒரு லட்சமும் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணத்தை வைத்து தங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என சாதிக் தம்பதியினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web