"கோடநாடு விவகாரம்" அதிமுக-திமுக காரசார வாதம்!!

கோடநாடு விவகாரம் பற்றி சட்டப்பேரவையில் அதிமுக-திமுக இடையே வாதம் நடைபெறுகிறது
 
eps stalin

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் நம் தமிழகத்தில் சில தினங்களாகவே தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூடப்பட்டு வருகிறது. மேலும் இதில் வாதங்கள் அதிகமாக நடைபெறுகிறது. கோடநாடு கொலை விவகாரம் இது குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.kodanad

அதன்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து தான் அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறினார். ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது ஏன்?என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார். கோடநாடு  இல்லத்தில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது சிசிடிவி ஏன் செயல்படவில்லை என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.

கோடநாடு வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது யாரென்றும் சட்டப்பேரவையில் முதல்வர் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சொத்து வேறு ஒருவருக்கு சென்று விட்டது என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நாங்கள் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

From around the web