காய்ச்சல் சளி போன்றவைகள் இருந்தால் பயணம் செய்வதை  தவிர்க்க தெற்கு ரயில்வே பயணிகளுக்கு கனிவான வேண்டுகோள்!

காய்ச்சல் சளி போன்றவைகள் இருந்தால் பயணம் செய்வதை  தவிர்க்கவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!
 
காய்ச்சல் சளி போன்றவைகள் இருந்தால் பயணம் செய்வதை தவிர்க்க தெற்கு ரயில்வே பயணிகளுக்கு கனிவான வேண்டுகோள்!

தமிழகத்தில் சில தினங்களாக  கொரோனாவின் தாக்கமானது அதிகரித்துள்ளது. கொரோனா நோயானது முதன்முதலில் இந்தியாவில் அருகே உள்ள இந்தியாவின் நட்பு நாடான சீனா நாட்டில் கண்டறியப்பட்டது.அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவி, உலகத்தின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வீரியமானது காணப்பட்டதாக தகவல். உலக மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். மேலும் கொரோனா நோயானது பல்வேறு நாடுகளில் கட்டுப்பாட்டுக்குள் வராமல் அதிகரித்தது.

corona

இந்தியாவில்  கொரோனா ஆரம்பத்தில் தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது எந்தவொரு நாடும் கையில் எடுக்காத முழு ஊரடங்கு திட்டத்தினை இந்திய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தியது. இதனால் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாக குறைந்தது. இதனை கண்ட மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளிலும் இந்தியாவை போல முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தினார்.

மேலும் பல நாடுகளில் நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.  கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது .மேலும் பல மாநிலங்கள் பல்வேறு உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் இந்தியாவில் தரை வழி பயணத்தில் மிகவும் குறைவாகும், நேரம் மிச்சப்படும் பயணம் ரயில்வே.இந்தியாவின் தெற்கு ரயில்வே துறை ஆனது தற்போது பயணிகளுக்கு பணிவான வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதன்படி பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் முக கவசம் அணிவது, சமூக விலகல், கை சுகாதாரம் உள்ளிட்டவற்றை ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பின்பற்றவும் வேண்டும். தேவையற்ற மற்றும் குழுக்களாக ரயிலில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் முழுமையாக ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

From around the web