அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்: டிரம்பை எதிர்த்து போட்டியிடும் நடிகையின் கணவர்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் அவரை எதிர்த்து பிரபல நடிகை கிம் கர்தர்ஷியானின் கணவர் கென்யா வெஸ்ட் போட்டியிட போவதாக செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தற்போதைய நிலையில் அமெரிக்காவின் மீட்டெடுக்க வேண்டிய கடமை இருப்பதாகவும் இதனால் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் திட்டமிட்டு இருப்பதாகவும் கென்யா
 

அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்: டிரம்பை எதிர்த்து போட்டியிடும் நடிகையின் கணவர்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் அவரை எதிர்த்து பிரபல நடிகை கிம் கர்தர்ஷியானின் கணவர் கென்யா வெஸ்ட் போட்டியிட போவதாக செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போதைய நிலையில் அமெரிக்காவின் மீட்டெடுக்க வேண்டிய கடமை இருப்பதாகவும் இதனால் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் திட்டமிட்டு இருப்பதாகவும் கென்யா வெஸ்ட் தனது டுவிட்டரில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கென்யா வெஸ்ட் இதனை தனது டுவிட்டரில் பதிவு செய்த ஒரு சில நிமிடங்களுக்குள் மில்லியன்கணக்கானோர் அந்த டுவிட்டை ரீடுவீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடும் அதிருப்தி இருப்பதால் அவரை எதிர்த்து கென்யா வெஸ்ட் போட்டியிட்டால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என்றும் மீண்டும் ஒரு கருப்பின அதிபர் அமெரிக்காவுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் ஒரு கருப்பினர் தான் அமெரிக்காவின் அதிபராக வேண்டும் என்ற குரல் தற்போது மேலோங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web