தமிழகத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்களுக்கும் அதிகரித்துள்ளது ஆட்கொல்லி!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 411 சிறார்களுக்கு  கண்டறியப்பட்டுள்ளது!
 
தமிழகத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்களுக்கும் அதிகரித்துள்ளது ஆட்கொல்லி!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற வாசகம் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டு ஆனால் தற்போது எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைமைக்கு தமிழகமே தள்ளியுள்ளது மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இந்த கொரோனா கடந்த ஆண்டில் இந்தியாவில் வர தொடங்கியது. ஆனால் இந்தியா முழு ஊரடங்கு மூலம் இந்த கொரோனா  கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.  இந்த கொரோனாவின் தாக்கமானது தற்போது பல மாநிலங்களில் மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

corona

அந்தப்படி இந்தியாவில் மும்பை பூனே உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக கொரோனா  தொற்றானது 50 ஆயிரத்தை கடந்து மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தலைநகர் டெல்லியிலும் கொரோனா  அதிகரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்நிலையில் பல மாநில அரசுகள் சார்பில் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்றைய தினம் முதல் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக தமிழகத்தின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் தளர்வு முறைகள் போடப் பட்டிருந்த நிலையில் தற்போது இன்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருப்பினும் கொரோனா தாக்கமானது தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து மக்களை வேதனைப்படுகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தமிழகத்தில் 11 ஆயிரத்தை நெருங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு தினங்களாக தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்த கொரோனா வயது வரம்பின்றி அனைவரும் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 411 சிறார்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் 12 வயதுக்குட்பட்டோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.தமிழகத்தின் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கையோடு மட்டுமல்லாமல் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web