நீதி அரசர்களுக்கும் ஆட்கொல்லி நோயா?வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு!

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
நீதி அரசர்களுக்கும் ஆட்கொல்லி நோயா?வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு!

தமிழகத்தில் தலைநகரமாக உள்ளது சென்னை மாநகரம். சென்னையில் உயர்நீதிமன்றம் உள்ளது.ஆயினும் தென் தமிழக மக்களுக்கு இந்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருவது மிகவும் சிரமமாக உள்ளதால் அவர்களுக்கு பயனளிக்கும் வண்ணமாக தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற பகுதியாக காணப்படும் மதுரை மாநகரில் உயர்நீதிமன்றக் கிளை உள்ளது. மேலும் இவ்விரு நீதிமன்றங்களிலும் தினந்தோறும்  வழக்குகள் விசாரிக்கப்பட்டு கின்றன.corona

தமிழகத்தில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. எதிராக பல்வேறு பகுதிகளிலும் தமிழக அரசின் சார்பில் விதிமுறைகளை எடுக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சார்பில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. மேலும் தமிழக அரசானது திரையரங்குகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. மேலும் முக கவசம் அணிவது கட்டாயம் போன்ற பல விதிமுறைகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்நோயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக காணப்படுவது வேதனை அளிக்கிறது.

 தற்போது நீதியரசர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா  உறுதியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதன்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீதிபதிகளிடம் பணியாற்றும் அலுவலர்கள், ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நீதிமன்ற பணியாளர் 13 பேருக்கு கொரோனா அடுத்து நீதிமன்ற வளாகம், குடியிருப்பு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

From around the web