குஷ்பு திடீர் டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்கின்றாரா?

 

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு பாஜகவில் இணைய போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு ஏற்கனவே பலமுறை குஷ்பு விளக்கம் அளித்து விட்ட போதிலும் தொடர்ச்சியாக இந்த வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று திடீரென அவர் டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். கொரனோ பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர் டெல்லிக்கு பயணம் செய்வதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 

ஆனால் அவர் டெல்லிக்கு அமித்ஷாவை சந்திக்க தான் செல்கிறார் என்றும் பாஜகவின் இணையப் போகிறார் என்றும் மீண்டும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த குஷ்பு ’காங்கிரஸ் கட்சியில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எனது டெல்லி பயணத்தை இவ்வளவு பெரிய விஷயமாக்குவார்கள் என்று தான் நினைக்க வில்லை என்றும் கூறினார் 

மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு அமித்ஷாவுக்கு வாழ்த்து கூறுவது தவறா என்றும் ஒரு டுவிட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு வதந்தி பரப்புவதா? தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web