திமுக எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய குஷ்பு!

 

சென்னை ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம் அவர்கள் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் பாஜக உடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதும் தெரிந்தது. மேலும் அவர் விரைவில் பாஜகவில் சேருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் எம்எல்ஏ குக செல்வம் அவர்களின் மருமகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாலை விபத்தில் சிக்கி காலமானார். அவரது மறைவிற்கு குக செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள குக செல்வம் வீட்டிற்கு பாஜக தலைவர்எல் முருகன் அவர்களுடன் சென்ற நடிகை குஷ்பு குக செல்வம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு முதல் முதலாக திமுக எம்எல்ஏ ஒருவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web