பாஜகவில் குஷ்பு: மறைமுகமாக போட்ட டுவீட் வைரல்!

 

இன்று மதியம் ஒரு மணிக்கு பாஜகவில் இணைய உள்ளதாக குஷ்பு குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதை அவர் தனது டுவிட்டரில் மறைமுகமாகக் குறிப்பிட்டு உள்ளார்

என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் மாற்றம் தவிர்க்க முடியாதது என்றும் அவர் தனது டுவிட்டில் கூறியுள்ளார். அவர் மாற்றம் என்று குறிப்பிட்டது பாஜகவில் தான் இணைவதைத்தான் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த டுவிட்டில் அவர் பதிவு செய்த புகைப்படத்தில் அவர் காவி நிற உடை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு டெல்லி செல்வதற்காக வந்த குஷ்புவிடம் இது குறித்த கேள்விக்கு ’கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று அவர் கூறியுள்ளார் 

என்னுள் ஏற்பட்ட மாற்றம் என்று டுவீட் செய்தது மற்றும் காவி உடை அணிந்தது ஆகியவை அவர் பாஜகவில் சேர உள்ளதை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. இன்று மதியம் ஒரு மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணையவிருப்பதாகவும், அவருக்கு இன்னும் ஒருசில நாட்களில் தமிழக அளவில் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது


 

From around the web