முக ஸ்டாலினை எதிர்த்து குஷ்பு? பாஜகவின் மாஸ்டர் பிளான்!

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் வரவிருப்பதை அடுத்து திமுக அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்பட தேர்தல் வியூகங்களை அமைத்து வருகின்றன என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் தற்போது இந்த வியூகத்தில் பாஜகவும் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 21ஆம் தேதி தமிழகம் வரவேற்கும் அமித்ஷா, புதிய வியூகங்களை வகுத்துக் கொடுப்பார் என்றும் அதன்படி பாஜக தமிழகத் தலைவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது 

kushboo

குறிப்பாக திமுகவை இந்த தேர்தலில் முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே பாஜகவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முக ஸ்டாலினை அவரது கொளத்தூர் தொகுதியில் ஜெயிக்க விடக்கூடாது என்பதில் பாஜக தலைமை தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 

எனவே குளத்தூர் உட்பட எந்த தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் குஷ்பு அல்லது அண்ணாமலை ஆகிய இருவரில் ஒருவரை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது 

ராகுல்காந்தி தொகுதியில் ஸ்மிருதி இராணியை நிற்க வைத்தது போல் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான வேட்பாளரை நிற்க வைத்து அவரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விடாதபடி செய்ய வேண்டும் என்பது பாஜகவின் திட்டம் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web