ரஜினி பட காட்சிகளை வைத்து மாஸ்க் விளம்பரம் செய்த கேரள போலீஸ்!

 
ரஜினி பட காட்சிகளை வைத்து மாஸ்க் விளம்பரம் செய்த கேரள போலீஸ்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகின்றன

மேலும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல்துறையினர் ஒரு சில வீடியோக்கள் மூலம் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவதன் அவசியத்தை விழிப்புணர்வு செய்து வருகின்றனர்

mask

இந்த நிலையில் கேரள போலீசார் ரஜினி நடித்த படங்களின் காட்சிகளை வைத்து மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளனர். ரஜினி நடித்த பாபா மற்றும் குரு சிஷ்யன் ஆகிய திரைப்பட காட்சிகளை வைத்து மாஸ்க் அணிவது அவசியத்தை குறிப்பிட்டு வீடியோவை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web