இரண்டு மாதங்களாக குடும்பத்தினரை சந்திக்கவில்லை: கேரளா சுகாதார அமைச்சர் தகவல்

கொரனோ வைரஸ் காரணமாக பணி அதிகம் இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக தான் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் கேரள அரசும் கேரள சுகாதாரத் துறையும் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தும் கேரள மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்து
 

இரண்டு மாதங்களாக குடும்பத்தினரை சந்திக்கவில்லை: கேரளா சுகாதார அமைச்சர் தகவல்

கொரனோ வைரஸ் காரணமாக பணி அதிகம் இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக தான் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் கேரள அரசும் கேரள சுகாதாரத் துறையும் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தும் கேரள மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்து வருகிறது

அது மட்டுமன்றி திடீரென வெள்ளம், நிலச்சரிவு மற்றும் விமான விபத்து ஆகிய இயற்கை பேரிடர்களும் அடுத்தடுத்து கேரளாவுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 63 வயதான கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள், தான் தனது வீட்டிற்கு சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்றும் தனது கணவர், தனது மகன் மற்றும் மருமகள், பேரக்குழந்தைகள் ஆகியோர்களை பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் என்னுடைய ஒவ்வொரு போன் அழைப்புக்காக அவர்கள் காத்திருப்பார்கள் என்றும் கூறியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web