இந்திய விமானப்படைக்கு திடீரென அழைப்பு விடுத்த கேரள முதல்வர்: என்ன காரணம்?

கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக இடுக்கி பகுதிகளில் கனமழை பெய்த காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ராஜமலை என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கி உள்ளதாக அஞ்சப்படுகிறது இதனை அடுத்து மீட்பு
 

இந்திய விமானப்படைக்கு திடீரென அழைப்பு விடுத்த கேரள முதல்வர்: என்ன காரணம்?

கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக இடுக்கி பகுதிகளில் கனமழை பெய்த காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ராஜமலை என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கி உள்ளதாக அஞ்சப்படுகிறது

இதனை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தனர். இப்போது வரை நான்கு நபர்கள் மட்டும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் 10 பேர் காயத்துடன் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கேரள அரசு தீவிரமாக உள்ளது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்திய விமானப்படையை மீட்பு பணிக்கு அனுப்புமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்கப்பட்டு இன்னும் சில நிமிடங்களில் இந்திய விமானப்படை கேரளாவை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web